தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் தேனித் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய தங்க தமிழ்செல்வன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அரியணைக் கட்டிலில் ஏறியுள்ள பாஜக எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு ஓ பன்னீர் செல்வத்தை முதல்வர் பொறுப்பில் அமர வைக்க இருக்கிறது என்றும் தனது மகனுக்காக பெரிய குளம், ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளை ஓ. பன்னீர்செல்வம் கைவிட்டிற்கிறார் என்றும் பேசியுள்ளார். அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.ரவீந்திரநாத் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More