தமிழகத்தில், தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் பரபரப்பாக நடந்து வருகிறது. தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் ஓய்வதால், அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தேமுதிக கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு, விஜயகாந்த காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். 37 வினாடிகள் மட்டுமே உள்ள இந்த காணொளியில், 6 கட் இருக்கிறது.
தேர்தல் நேரங்களில், கம்பீரமாக சிங்கம் போல் கர்ஜித்து பேசிய விஜயகாந்த் இன்று ஒரு நிமிடம் கூட முழுசாக பேச முடியவில்லையே என ரசிகர்களும், தொண்டர்களும் அவரின் நிலையை பார்த்து வேதனையில் உள்ளனர்.
— Vijayakant (@iVijayakant) April 14, 2019