Mnadu News

உலகக்கோப்பை தொடரில் இருந்து நீக்கப்பட்டார் தொடக்க வீரர் ஷிகர் தவான்

உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணி பட்டியலில் தொடக்க வீரர் ஷிகர் தவான் இடம்பெற்றிருந்தார் .இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த போட்டியில் அதிரடியாக விளையாடி சதம் அடித்து அசத்தினார்.

அந்தப் போட்டியில் நாதன் கோல்ட்டர் நைல் வீசிய பந்து, ஷிகர் தவானின் இடது கை கட்டை விரலில் பட்டு காயமடைந்தார் . வலியைப் பொறுத்துக் கொண்டு ஆடிய ஷிகர் தவான் அணிக்காக 117 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு உதவினார். இதை அடுத்து கட்டை விரல் காயத்துக்கு சிகிச்சை பெற்றார்.

ஷிகர் தவானுக்கு ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் கட்டை விரல் முறிந்து இருப்பதை கண்டறிந்துள்ளனர். கட்டை விரல் குணமாக கட்டாயம் 3 வார காலம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர் இந்திய அணியில் இருந்து விலகியுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது .

இந்நிலையில் அடுத்து வரும் போட்டிகளில் தவான் விளையாட முடியாத நிலையில் உள்ளதால் அவர்க்கு பதில் அணியில் மாற்று வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ள ரிஷப் பந்த் அல்லது ஸ்ரேயாஸ் அய்யருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post with your friends