Mnadu News

ஹாலிவுட் ‘அவெஞ்சர்ஸ்’ படத்தில் இணையும் ஆஸ்கார் நாயகன்

அவெஞ்சர்ஸ்’ படத்தின் 4ம் பாகமான ‘அவென்சர்ஸ் எண்ட் கேம்’ படம் வரும் ஏப்ரல் 26ம் தேதி திரைக்கு வரவுள்ளது. பல சூப்பர் நாயகன்கள் ஒன்று சேர்ந்து இந்த படத்தில் நடித்துள்ளனர். தமிழில் மொழி மாற்றம் செய்யப்படும் இந்தப் படத்திற்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வசனம் எழுத ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.இந்த செய்தி வெளியானதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .

Share this post with your friends