Mnadu News

வெளியானது உலகக்கோப்பைக்கான இந்திய அணி பட்டியல்

இந்த ஆண்டு நடக்க இருக்கும் 2019 ஆம் ஆண்டின் உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் இந்திய அணி வீரர்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டது .

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, வரும் மே மாதம் 30-ம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த உலககோப்பை போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் தற்போது தகுதிபெற்றுள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தலா 9 போட்டிகளில் விளையாட உள்ளன.

இதில் தகுதி பெறும் அணிகள் அரை இறுதி சுற்றுக்கு நுழையமுடியும். இந்தியா தனது உலககோப்பை முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் உலகக்கோப்பை போட்டியில் விளையாடப்போகும் இந்திய அணி இன்று மும்பையில் இருந்து அணி வீரர்கள் தேர்வாளர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது .மேலும் இந்த போட்டியில் 2 தமிழக வீரர்கள் தேர்வாகியுள்ளார்கள்.

முதல் முறையாக விராட் கோலி தலைமையில் இந்த போட்டி நடக்கப்போகிறது அதற்கான 15 பேர் கொண்ட வீரர்கள் விவரம் :

விராட் கோலி, தோனி, தவான், ரோஹித் ஷர்மா, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், புவனேஷ்வர்குமார், பும்ரா, கேஎல் ராகுல், சஹால், ஹர்டிக் பாண்டியா, முகமது ஷமி, கேதார் ஜாதவ்,

Share this post with your friends