ஓவியாவும், ஆரவ்வும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து காதலித்ததாக கூறப்பட்டது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தபின்னரும் இருவரும் ஜோடியாக பல இடங்களுக்கு சென்று வந்ததால் காதல் நீடிப்பதாகவும் கருதப்பட்டது.ஆனால் ஓவியா இந்த தகவலை மறுத்து வந்தார்.
இந்நிலையில், நேற்று ஓவியா தனது 28வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு, நேற்று இரவு நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்டியுள்ளார். அப்போது, ஆரவ், காயத்ரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஓவியாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.