டெல்லியில் மாநிலங்களவை பட்ஜெட் மீதான விவாதத்தில் நாட்டின் முதல் பெண் நிதி அமைச்சராக பொறுப்பேற்றதற்காக நிர்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டார் .மேலும் பேசிய அவர் பாஜக தனது அரசியல் ஆதிக்கத்தை அதிகரிக்க விரும்பினால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கும் என்றார் .
சிறிய சிறிய மாற்றங்கள் எல்லாம் சீர்திருத்தங்கள் ஆகாது என்றும்,வெளிப்படையான சீர்திருத்தங்கள் மேற்கொண்டால் தான் பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்கள் கொண்டு வரமுடியும் என்றார் .பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை குறித்த விவரம் பட்ஜெட்டில் இல்லை என்றார் .
மேலும் இதை பற்றி பேசிய அவர் நிதி ஆண்டின் மொத்த வருமானம், மொத்த செலவு குறித்து நிதி அமைச்சர் பேசாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.