பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி இந்திய பெண் ஷாமிய அர்சூவை திருமணம் செய்து கொண்டார். துபாயில் இவர்களது திருமணம் நேற்று விமர்சையாக நடைபெற்றது. ஹசன் அலி – ஷாமிய அர்சூ திருமணம் செய்து கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இந்திய பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் 4-வது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி. ஜாஹீர் அபாஸ், மொஷின் கான், சோகிப் மாலிக் இவர்களைத் தொடர்ந்து தற்போது ஹசன் அலி இந்திய பெண்ணைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
துபாயில் நடைபெற்ற இவர்கள் திருமணத்திற்கு பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முன்னாள் கேப்டன் மிஷ்பா-ஹல்-அக் தலைமையில் பாகிஸ்தான் வீரர்கள் தீவிர பயிற்சி பெற்று வருவதால் திருமணத்தில் அவர்களால் கலந்து கொள்ள முடியவில்லை.