Mnadu News

மியான்மர் பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அச்சத்தில் மக்கள்…

மியான்மர் மற்றும் நாகலாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக அப்பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்தனர்.மியான்மரில் இன்று காலை 8.19 மணியளவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் கட்டிடங்கள் குலுங்கியதையடுத்து மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். இதனிடையே நாகலாந்தின் டியன்சாங் பகுதியில் இருந்து கிழக்கே 132 கிலோ மீட்டர் தொலைவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் பூகம்பவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.7ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends