சீனாவில் தற்போது அனைவரிடத்திலும் பரவி வரும் ஒரு விபரீதமான பொழுதுபோக்கு விளையாட்டு ட்ரெண்டாகி வலம் வருகிறது. நாடியில் கொஞ்சம் அகலமான துணி அல்லது கயிறைக் கட்டிக் கொண்டு வேறு எந்த உபகரணத்தின் துணையுமில்லாமல் தொங்க வேண்டும் இதுவே இந்த விளையாட்டின் முக்கிய அம்சம் .
இந்த வினோத விளையாட்டு கிட்டத்தட்ட தூக்கில் தொங்குவது போல காணப்படும் இந்த விபரீதமான விளையாட்டு சில சமயம் ஆபத்தில் முடிந்து விடுகிறது.இந்த விளையாட்டின்போது கயிறு கழுத்தில் சிக்கியும், தாடை உடைந்தும் சிலருக்கு உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதால், இதுபோன்று யாரும் முயற்சிக்க வேண்டாம் என அந்நாட்டு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .