தமிழ் திரையுலகில் நடிகர் சிம்புவுடன் ‘வல்லவன்’, ‘காளை’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் மஹத். இதனை தொடர்ந்து நடிகர் அஜித்தின் ‘மங்காத்தா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவர் கடந்த 2018ம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். மேலும் இவர் மிஸ் இந்தியா எர்த் 2002 பிராச்சி மிஸ்ராவை சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், இவர்களது நிச்சயதார்த்தை வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.