சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லிட் ஆலை தரப்பில் விளக்கம் தெரிவித்துள்ளது, அதில் கூறியதாவது
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுசூழலுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என ஸ்டெர்லைட் விளக்கம் அளித்துள்ளது .மேலும் துப்பாக்கி சூட்டால் பாதிக்கப்பட்டவரை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை சில காலம் மூடப்பட்டது என தெரிவித்திருந்தது .
மேலும் ஆலையினால் எந்த ஒரு பாதிப்பு இல்லை என NRI எனப்படும் தேசிய சுற்றுசூழல் ,பொறியியல் ஆய்வு நிறுவனம் கூறியதாக ஸ்டெர்லைட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ,தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிறகு, மக்களை சமாதானப்படுத்துவதற்காக ஆலையை நிரந்தரமாக மூட அரசு உத்தரவிட்டதாக உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .