மக்களவை தேர்தல் வருவதற்கு இன்னும் சில தினங்களே உள்ளன. இந்நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.ஆனால் தேமுதிக தலைவைவரான விஜயகாந்த் அவர்களுக்கு உடல்நிலை கருத்தில் கொண்டு அவர் இதுவரை எந்தவொரு பிரச்சாரத்தில் கலந்து கொள்ளாமல் இருந்தார் .
சிகிச்சைக்கு பிறகு, முதன் முறையாக நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட்டார். சென்னையில் வில்லிவாக்கம், கொளத்தூர், மூலக்கடை உள்ளிட்ட இடங்களில் அவர் வாக்கு சேகரித்தார். அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் வேனில் வீதி வீதியாக சென்று கைகளை அசைத்தபடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
மத்திய சென்னை தொகுதி பாமக வேட்பாளர் சாம்பால், வடசென்னை தொகுதி தேமுதிகவேட்பாளர் மோகன்ராஜ் ஆகியோருக்கு ஆதரவாக, மாம்பழம் மற்றும் முரசு சின்னத்திற்கு வாக்களிக்கும் படி விஜயகாந்த் கேட்டுக் கொண்டார்.மேலும் அவர் பிரச்சாரத்தின் போது கூறுகையில் ,தயவு செய்து ஸ்டாலினுக்கு ஓட்டு போடாதீர்கள் என கேட்டு கொண்டார் .
வடசென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் திரு அழகாபுரம் ஆர் மோகன்ராஜ் அவர்களுக்கும், மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் திரு சாம்பால் அவர்களுக்கும், தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் திரு டாக்டர் ஜெ ஜெயவர்தனன் அவர்களுக்கும் வாக்குகளை சேகரிக்க தற்போது பிரச்சார பயணத்தில். pic.twitter.com/zWT8KS1Si9
— Vijayakant (@iVijayakant) April 15, 2019