உலக சாம்பியன் பட்டம் வென்று திங்கட்கிழமை நள்ளிரவு இந்தியா வந்தடைந்த பி.வி.சிந்துவுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பிரதமர் மோடியை சந்தித்து ஆசிபெற்றார். பிரதமர் மோடி, சிந்துவுக்கு பதக்கத்தை அணிவித்தார். தங்கப்பதக்கத்துடன் நாட்டுக்கு பெருமையும் சேர்த்துள்ளதாக பிரதமர் மோடி, சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பி.வி சிந்துவை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவரது எதிர்கால முயற்சிகளிலும் மிகச்சிறந்து செயல்பட வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.முன்னதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜுவை சந்தித்து வாழ்த்து பெற்றார் பி.வி.சிந்து. அப்போது சிந்துவுக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
Prime Minister @narendramodi meets world champion @Pvsindhu1, calls her "India’s pride". pic.twitter.com/VNziCRwKZa
— Ahmedabad Times (@AhmedabadTimes) August 27, 2019