Mnadu News

காஞ்சிபுரத்தில் வி.ஐ.பி வரிசையில் காத்திருந்த பக்தர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் விரட்டியடிப்பு …

பதினெட்டாவது நாளான இன்று அத்திவரதருக்கு கத்தரிப்பூ நிற பட்டால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நேற்று சந்திரகிரகணம் என்பதால் பெரும்பாலான மக்கள் தரிசனத்தை தவிர்த்துவிட்ட நிலையில் நேற்று கூட்டம் வரவில்லை.ஆனால்,இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.கூட்டத்தை தடுக்க தற்காலிகப் பேருந்து நிலையங்களில் இருந்து 30 க்கும் அதிகமான பேருந்துகளில் மக்கள் கோவிலுக்கு அழைத்து வரப்படுகின்றனர். வெளியூர் வாகனங்களை ஊருக்குள் கொண்டுவர வேண்டாம் என்றும் தற்காலிக பேருந்து நிலையங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு மினி பேருந்துகளில் கோவிலுக்கு வருமாறும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.இந்நிலையில் ,காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனத்துக்காக வி.ஐ.பி வரிசையில் காத்திருந்த பக்தர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸ் விரட்டியடித்தனர் .ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்துள்ளதால் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸ் தற்பொழுது திணறி வருகின்றனர் .

Share this post with your friends

ரயில்வே சிக்னல்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு ரயில்வே துறை கடிதம்.

அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் எழுதி உள்ள கடிதத்தில், ரயில்வே சிக்னல்...

Read More

டெல்லியில் வளர்ச்சியின் வேகம் குறையவில்லை- ஆனால் மாசு குறைந்துள்ளது: கேஜரிவால் பேச்சு.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தியாகராஜா அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றி உள்ள...

Read More