சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொன்பரப்பியில் நேற்று மாலை கலவரம் மூண்டது. ஒரு சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் இருக்கும் குடியிருப்பில் தாக்குதலை நடத்தினார்.
இதுகுறித்து கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தொல். திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெற்றியை பொறுத்துக் கொள்ளாத நபர்கள், பொன்பரப்பி கிராமத்தில் வன்முறையில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும் பொன்பரப்பியில் மறுதேர்தலை நடத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தப்போவதாக திருமாவளவன் தெரிவித்தார்.