புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வல்லவாரி கிராமத்தில் உள்ள குளத்தை ஊர்மக்கள் தாங்களாகவே 5 லட்சம் ரூபாய் செலவில் தூர் வாரும் பணியை மேற்கொண்டுள்ளனர்.300க்கும் அதிகமானோர் இந்த குளத்தை குளிப்பதற்கும், கால்நடைகளை குளிப்பாட்டவும் பயன்படுத்தி வந்தனர். நீண்ட காலமாக தூர் வாரப்படாததால் குளத்தில் புதர்கள் மண்டிக்கிடக்கின்றன. இந்நிலையில் அரசை எதிர்பார்த்து காத்திருக்காமல், ஊரார் ஒவ்வொரு வீட்டுக்கும் தலா ஆயிரம் ரூபாய் என பணம் வசூலித்து ஜேசிபி இயந்திரம் மூலம் மண்ணை வெட்டி டிராக்டர் மூலம் அள்ளி குளத்தின் கரையை கட்டி வருகிறார்கள். பருவமழை பெய்தாலோ, மேட்டூர் அணை திறக்கப்பட்டு நீர் வந்தாலோ குளத்தில் வருடம் முழுவதும் தண்ணீர் கிடைக்கும் என்று அந்த ஊர் மக்கள் கூறுகின்றனர்.
மழை பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை தேவை – ஜி.கே.வாசன்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை முறையாக கணக்கிட்டு, தமிழக அரசு முழு நிவாரணத்தை...
Read More