பொன்பரப்பியில் இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு சமூகத்தைச் சார்ந்த சமூகத்தினர் தலித் குடியிருப்புகளில் கடுமையாகத் தாக்கினர். இதனால் மறுவாக்குப் பதிவு குறித்து தேர்தல் ஆணையிடத்திடம் முறையிடப்போவதாக திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி, பொன்பரப்பியில் நடந்த வன்முறைக்கும் தேர்தல் நடைபெற்ற இடத்துக்கும் சற்றும் தொடர்பில்லாததால் அங்கு மறுவாக்குப்பதிவு நடத்த வாய்ப்பே இல்லை.
ஆனால் தருமபுரியில் 8, திருவள்ளூர் 1, கடலூர் 1 ஆகிய இடங்களில் மறுவாக்குப்பதிவு நடத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் அளிக்கும் விவரத்தின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.