தமிழகத்தில் போதிய மழை பெய்யாததால் பல மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது குறிப்பாக சென்னையில் குடிநீர் தட்டுபாட்டால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்நிலையில் தமிழக முழுவது மழை வேண்டி சிறப்பு பூஜைகளும் யாகங்களும் நடைபெற்று வருகிறது இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்துள்ள கீழவலம் பகுதியில் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் இயக்குனர் பி.டி செல்வகுமார் தலைமையில் மழை வேண்டி 108 பசுக்களுக்கு பெண்கள் கோ பூஜை நடத்தினர். மேலும் எப்போது எல்லாம் இயற்கை வளம் குறைபாடு உள்ளதோ அப்போது எல்லாம் கோபூஜை செய்தால் நாட்டில் வறுமை என்பது இருக்காது என முன்னோர்கள் எழுதி வைத்திருந்த ஐதீக முறைபடி கோ பூஜை விழா நடத்தபட்டது இந்த பூஜையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பசுக்களை வழிபட்டனர்
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More