மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை பலரும் திரைப்படமாக உருவாக்கி வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தியின் தலைவராக இருக்கும் ஜெகதீஸ்வர ரெட்டி ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுக்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்துள்ளார். இந்த படத்துக்கு ‘சசி லலிதா’ என தலைப்பிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க இந்தி நடிகை கஜோலிடம் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார். மேலும் சசிகலா வேடத்தில் நடிக்க அமலா பாலிடம் பேச்சு வார்த்தை நடக்கிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.