Mnadu News

காஞ்சி அத்திவரதரை தரிசிக்க குடியரசு தலைவர் வருகை…

ஜனாதிபதி வருகையை ஒட்டி இன்று பகல் 1 மணி முதல் மாலை 5 வரை அத்திவரதரை தரிசிக்க பொதுமக்களுக்கு அனுமதியில்லை.காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். திவ்ய தேசங்களில் ஒன்றாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் அத்திவரதர் வைபவத்தின் 12 ஆவது நாளான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அத்திவரதரை தரிசனம் செய்து வரும் நிலையில் இந்நிலையில் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அத்தி வரதரை தரிசிக்க இன்று வரவுள்ளார். இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.மேலும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் காஞ்சிபுரம் வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

Share this post with your friends