தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான பரப்புரையில் அனைத்து கட்சி தலைவர்களும் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று தேனியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் தமிழில் பேசி உரையை துவங்கினர் தற்போதைய பிரதமராக இருக்கும் மோடி.
அப்போது அவர் பேசியதாவது நம் கனவு புதிய இந்தியாவை நோக்கியது. இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக நாம் பாடுபடுவோம். பயங்கரவாதிகளை அழிக்க நாங்கள் கடுமையான முயற்சி எடுத்து வருகிறோம்.
உங்களின் காவலாளியாக எப்போதுமே நான் இருப்பேன என அவர் கூறினார். மேலும் மதுரை போடி ரயில் சேவை விரைவில் துவக்கப்படும் என்றும். நாளை துவங்கும் தமிழ் புத்தாண்டிற்கு வாழ்த்துக்கள் என்றும் கூறினார்.