Mnadu News

பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சி புதிய சாதனை-பியர் கிரில்சு பதிவிட்ட ட்விட்

பிரதமர் மோடி பங்கேற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியான மேன் வெர்சஸ் வைல்ட் உலக அளவில் மிகப்பெரிய அளவில் வரேவற்படைந்ததோடு மட்டுமல்லாமல் நம்பர் 1 இடத்தை பிடித்தது.பிரபல தொலைக்காட்சி சேனலான டிஸ்கவரியில் ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியில், தொகுப்பாளர் பியர் கிரில்சுடன், பிரதமர் மோடி கலந்துக் கொண்டு காட்டுக்குள் பயணித்தார். இந்த நிகழ்ச்சி பல மொழிகளில் டப் செய்யப்பட்டு, கடந்த 12ம் தேதி இரவு 9 மணி அளவில் ஒளிபரப்பப்பட்டது.

இந்த நிகழ்ச்சிதான் உலக அளவில் அதிக டிரெண்டான தொலைக்காட்சி நிகழ்ச்சியாக சாதனை படைத்துள்ளது என பியர் கிரில்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சி புதிய சாதனை படைத்துள்ளது என்றும் ட்விட்டர் 3.6 பில்லியன் பதிவுகளை கொண்டு சாதனையை நிகழ்த்தியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Share this post with your friends