உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிகண்டார் . இந்நிலையில் அவருக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி வாரணாசி சென்றார் .அவரை உத்தரபிரதேச மாநில கவர்னர் ராம் நாயக், மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் வரவேற்றனர். பின்னர், வாரணாசியின் முக்கிய வீதிகளில் வழிநெடுக நின்ற தொண்டர்களுக்கு, காரில் இருந்தபடி நன்றி தெரிவித்தார். பிரதமர் மோடி வருகையையொட்டி, பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.அதன் பின்னர் ,காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தும் பிரதமர் மோடி, பின்னர் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டத்தில் பேசுகிறார். அங்கு குடிநீர், போக்குவரத்து பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நடக்கும் நலத்திட்டங்களையும் பார்வையிட இருக்கிறார்.
#WATCH Varanasi: Crowd breaks into chants of 'Modi Modi' as the convoy of PM Modi moves through streets of Varanasi to Kashi Vishwanath temple. pic.twitter.com/YW0t5dkQPP
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) May 27, 2019