Mnadu News

மே 1ம் தேதி தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம்

நடிகர் விஷால் தலைமையிலான, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம், சென்னை ராமாபுரத்தில் உள்ள ஜீவன் ஜோதி மஹாலில் மார்ச் 3ம் தேதி நடைபெற இருந்தது. ஆனால், ஓய்வு பெற்ற நீதிபதி பாஷா ஆலோசனைப்படி, பொதுக்குழு கூட்டம், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது மே 1ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை எழும்பூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் வரும் மே 1ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

Share this post with your friends