உலகப்புகழ்பெற்ற பப்ஜி, ஃபோர்ட்நைட் விளையாட்டுக்கள் இளைஞர்களை தங்களின் கட்டுக்குள் வைத்திருக்கிறது. இந்நிலையில் ஈராக் பாராளுமன்றத்தில் பப்ஜி போன்ற விளையாட்டுக்களால் இளைஞர்கள் சீரழிவதாகக் கோரி இது போன்ற விளையாட்டுக்களை தடைசெய்யவேண்டுமென கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில் நாட்டிற்கும் தனிமனிதருக்கும் சேதத்தை விளைவிக்கும் பப்ஜி ஃபோர்ட்நைட் கேம்களுக்கு ஈராக் நாட்டில் தடை விதிக்கப்படும் என ஈராக் நாடாளுமன்றத்தில் முடிவு செய்யப்பட்டு சட்டமாக இயற்றப்பட்டது.