புதுச்சேரியில் 2019- மார்ச் மாதத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது.
புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 97.57% . இது கடந்த ஆண்டை விட 3.2% அதிகரித்துள்ளது.
இதில் அரசு பள்ளியை பொறுத்த வரை 94.88% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 6.79% அதிகரித்துள்ளது.
கடந்த மார்ச் 2019-ல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 16, 520 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.
இதில் 8,192 மாணவர்களும் மற்றும் 8,328 மாணவிகளும் அடங்குவர்.
இன்று வெளியான தேர்வு முடிவுகளின் படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்ற 16, 119 மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 7,908 மாணவர்களும் 8,211 மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.