புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே திருவாப்பாடி கிராமத்தில் அய்யனார் திருக்கோவில் மண்டலாபிஷேகம் நடைபெற்றது.அறந்தாங்கி அருகே திருவாப்பாடி கிராமத்திலுள்ள ஸ்ரீஒமருடையஅய்யனார் திருக்கோவில் மண்டலாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
சுமார் 40லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கபட்டு ஸ்ரீ ஒமருடைய அய்யனார் புஷ்பகலாம்பிகை திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் கடந்த 17.2.19 அன்று நடைபெற்றது.அதனை முன்னிட்டு 48 நாட்களாக சிறப்பு மண்டலா அபிஷேகம் ஆராதனைகள் நடத்தபட்டது. அதன் நிறைவு நாள் அன்று அதிகாலை சிவாச்சாரியர்களால் சிறப்பு யாகசாலை பூஜைகள் தொடங்கபட்டது.
கலசங்களில் புனிதநீர் நிரப்பபட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. பின்னர் கலசத்திலுள்ள புனிதநீர் கலசங்களை தலையில் சுமந்து கோவிலின் சுற்று பிரகாரங்களை சுற்றி வந்து புனித நீரினால் அபிஷேகம் செய்யபட்டதுடன் பாலஅபிஷேகம், வசனை திரவியங்கள் போன்ற அபிஷேகங்கள் சாமிக்கு செய்யபட்டது.
மேலும் மலர்மாலைகளால் ஸ்ரீ ஒமருடைய அய்யனார் புஷ்பகலாம்பிகை அலங்காரம் செய்யபட்டு தீபாரதனைகள் நடைபெற்றது.மண்டலாபிஷேக நிறைவு நாளில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பெண்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யனார் அருள் பெற்றுச் சென்றனர்.