சமூக மோதல்களை உருவாக்கும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசு மற்றும் பொது சொத்துக்களுக்கு தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வீண்வதந்திகளை வாட்ஸ் அப் அல்லது சமூக வலைதளங்கள் மூலம் பரப்பினால் அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் .சமூக வலைதளங்களில் அவதூறு செய்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை ஏற்படும். பொன்னமராவதி உட்பட 49 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு மூன்று நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புகின்றது என்றார் மேலும் வாரம்தோறும் பொன்னமராவதி பகுதிகளில் சுற்று வட்டார கிராம மக்கள் அனைவரும் இன்று சந்தைக்கு வியாபாரத்துக்காக வருவது வழக்கம்.
ஆனால் தற்போது போக்குவரத்து இல்லாததால் பொதுமக்கள் சந்தை போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு யாரும் இங்கு வரவில்லை அதனால் வியாபாரிகள் கடுமையாக பாதிப்பு நிலைக்கு உள்ளாகி இருக்கின்றனர் .
மேலும் தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகள் அழுகும் சூழ்நிலைக்கு தள்ளப்படும் என மூன்று நாட்கள் வியாபாரத்தை இல்லை என்றால் அழகும் சூழ்நிலைக்கு தள்ளப்படும் என்று வேதனையுடன் வியாபாரிகள் கூறுகின்றனர் .மேலும் காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்கள் அச்சம் நிலையில்தான் வருகின்றனர் என்றும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
இதனால் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் வியாபாரிகள் மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனி பொன்னமராவதியில் வராதவாறு தமிழக அரசு மற்றும் காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
மேலும் பொதுமக்கள் கலவரத்தில் தங்களது கடைகளை அடித்து உதைத்ததால் பெரும் வேதனைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டதாகவும் மேலும் வெளியில் நிறுத்தப்பட்டுள்ள கார் போன்றவை கண்ணாடிகள் உடைந்தது வருத்தத்தில் பொதுமக்கள் கூறுகின்றனர்.