ராகவா லாரன்ஸ் நடித்து, இயக்கியுள்ள படம் ‘காஞ்சனா 3’. இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், படம் வெற்றி பெற ரசிகர் ஒருவர் கிரேன் மூலமாக தூக்கு காவடி எடுத்து வந்து லாரன்ஸின் கட்அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்யும் காணொளி ஒன்று வெளியானது. இந்த காணொளியை பார்த்த லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதில் ரசிகர் ஒருவர் இதுபோன்று கிரைன் மூலமாக எனது கட்அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்யும் காணொளியை பார்த்து மிகவும் வருத்தமடைகிறேன். இனிமேல் இதுபோன்ற ஆபத்தான செய்களில் ஈடுபடாதீர்கள். உங்களது அன்பை வெளிப்படுத்த விரும்பினால், கல்வி கற்க கஷ்டப்படும் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கை முக்கியம்” என்று அதில் கூறியுள்ளார்.