உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தேர்வான வீரர்களில் கே எல் ராகுல் , ஹர்டிக் பாண்டியா இடம்பெற்றுரிந்தனர் இந்நிலையில் இந்த இரு வீரர்கள் மீது பிசிசிஐ நிர்வாகம் தலா 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது .
கடந்த ஜனவரி மாதம் தொலைக்காட்சி ஒன்றில் காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் கே எல் ராகுல் ஹர்டிக் பாண்டிய ஆகிய இருவரும் பங்கேற்று பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக தகவல் வெளிவந்தது .
இந்நிலையில் இதுகுறித்து பிசிசிஐ நிர்வாகம் இரு வீரர்களிடம் விசாரணை நடித்தியது .இந்த விசாரணை நடித்திய பிசிசிஐ அதிகாரி டி.கே.ஜெயின் தனது முடிவை அளித்துள்ளார் .
இரு வீரர்களும் தற்போது உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார்கள். இருவரின் நலனைக் கருத்தில் கொண்டு இருவருக்கும் தலா ரூ.20லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த ரூ.20 லட்சத்தில் இருவரும் தலா ரூ.10 லட்சத்தை 10 பணியின்போது, உயிரிழந்த துணை ராணுவப்படையினரின் குடும்பத்தாருக்கு வழங்க வேண்டும்.மீதமுள்ள பணத்தை பார்வையற்றவர்களுக்கான கிரிக்கெட் போட்டியை ஊக்கப்படுத்தும் வகையில், தனியாக வாங்கி கணக்கு உருவாக்கி அதில் ரூ.20 லட்சத்தையும் டெபாசிட் செய்ய வேண்டும்.
இந்த அனைத்து அபராதத் தொகையும் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து 4 வாரங்களுக்குள் செலுத்தப் பட வேண்டும் என பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது .