Mnadu News

ஆந்திர முதல்வரிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரி வீட்டில் ரெய்டு

ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிரான பண மோசடி வழக்கு உள்ளிட்ட வழக்குகளை விசாரித்தவர் பாலினேனி ஸ்ரீனிவாச காந்தி. இவர் தற்போது ஐதராபாத்தில் உள்ள மத்திய ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு தடுப்புப் பிரிவில் உள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை இணை இயக்குநராக இருந்த உமாசங்கர் கவுடும், உதவி இயக்குநராக இருந்த காந்தியும் சோதனை என்ற பெயரில் தன்னை வேட்டையாடுவதாக ஜெகன்மோகன் ரெட்டி பிரதமர் மோடியிடம் புகார் தெரிவித்தார்.

தெலுங்கு தேச அரசின் தலையீட்டின் பேரில் தங்கள் குடும்பத்தினர் மீது அமலாக்கத்துறை ஒருதலைப்பட்சமாகவும், பழிவாங்கும் வகையிலும் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் ஐதராபாத்திலும், விஜயவாடாவிலும் உள்ள ஸ்ரீனிவாசகாந்தி தொடர்புடைய இடங்களில் நேற்று சோதனை மேற்கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் 3 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காந்தி அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை வருமானத்துக்கு மீறி பல்வேறு அசையும் அசையா சொத்துக்களை சேர்த்துள்ளதாக் சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share this post with your friends