கோடைகாலம் வந்தாலே தாங்க முடியாத வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும்,ஒரு புறம் கோடை விடுமுறையில் சுற்றுலா செல்ல நேரம் வந்துவிட்டது என்பதை அர்த்தம் .உதகையில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், இன்று முதல் உதகை மலைப்பாதை ரயிலின் இயக்கம், நாளொன்றுக்கு மூன்று முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறையை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கழிக்க, உதகைக்கு சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். அங்குள்ள சுற்றுலா தலங்களில் முதன்மையாக விளங்கும் உதகை , கேத்தி இடையேயான மலைப்பாதையில் ரயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.வழக்கமாக சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் தலா ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் மலை ரயில் சேவையானது, தற்போது கோடை சீசனை முன்னிட்டு நாள்தோறும் இயக்கப்படுகிறது. நாளொன்றுக்கு மூன்று முறை மலை ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.