வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மற்றும் மத்திய மாவட்டங்களில் அடுத்த 2 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென் தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாகவும், வெப்பச்சலனத்தாலும் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, நாகை, கடலூர் ஆகிய 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் கிழக்கு மத்திய அந்தமான் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.