ரஜினியின் தர்பார், கமலின் இந்தியன் 2, விஜய்யின் தளபதி 64 ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத்.இன்றைய தலைமுறையினரை கவரும் இசையமைப்பாளர்களில் மிக முக்கியமான ஒருவராக திகழ்பவர் அனிருத்.இந்த வருடம் அவருக்கு மிக முக்கியமான வருடங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இந்த வருடத்தில் ரஜினி, கமல், விஜய் என தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தர்பார் படத்திற்காக இரண்டாவது முறையாக ரஜினியுடன் கூட்டணி அமைத்துள்ளார். இதைத் தொடர்ந்து இந்தியன் 2 படத்திற்காக உலகநாயகன் கமல்ஹாசனுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்துள்ளார்.
அடுத்தடுத்து ரஜினி, கமல் படங்களுக்கு இசையமைத்து அசத்தி வரும் அனிருத் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் தளபதி 64 படத்தில் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். கத்தி படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் உடன் கைகோர்த்துள்ளார் அனிருத்.இதன்மூலம் தமிழ் சினிமாவில் முக்கியமான இசையமைப்பாளராக உருவாகியுள்ளார் அனிரூத் என்பது குறிப்பிடத்தகுந்தது .