நாடாளுமன்ற தேர்தல் வெற்றி, மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி என்றும் ரஜினிகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார் .மேலும் ஒரு தலைவனை முன்னிறுத்தி தான் வெற்றி கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.ராகுல் காந்தி பதவி விலகுவதை குறித்து பதிலளித்த ரஜினி ராகுல் காந்தி பதவி விலக தேவையில்லை என்றும் , எதிர்க்கட்சியின் செயல்பாடு முக்கியமானது என்றும் தெரிவித்தார்.மேலும் இது குறித்து அவர் கூறுகையில் , காங். மூத்த தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார் .
கோதாவரி – காவிரி இணைப்பு குறித்து நிதின் கட்கரி கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என்றும் தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்களால் பாஜக தோல்வியை தழுவியுள்ளது என்றும் விமர்சித்து கூறினார் .தமிழகத்தின் அதிமுக ஆட்சி தோல்வி அடைந்ததற்கு காரணம் எதிர்க்கட்சிகளின் வலுவான பிரசாம் தான் அதிமுக கூட்டணி தோல்வியடைய காரணம் என்றும் ரஜினி கூறினார் .இந்திராகாந்தி, ராஜீவ் காந்தியை தொடர்ந்து மக்களை கவர்ந்த தலைவர் மோடி என்றும் கூறினார் .மேலும் அவர் கூறுகையில் தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை என்று கூறியுளார் என்பது குறிப்பிடத்தக்கது.இறுதியாக மோடி பதவி ஏற்கும் விழாவில் ரஜினி பங்கேற்பதாக அதிகார பூர்வமாக தெரிவித்தார்.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More