இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு கேரளாவில் தொடங்கியதைத் தொடர்ந்து கேரளா அருகில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து மசூதிகளிலும் தொழுகையுடன் ரமலான் நோன்பு இன்று துவங்கியது.கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கடப்பாடு கிராமத்தில் நேற்றிரவு பிறை தென்பட்டதை தொடர்ந்து முஸ்லீம் மதகுருமார்களின் அறிவிப்புக்கிணங்க இன்று அதிகாலை முதல் கேரளா முழுவதும் ரமலான் நோன்பு துவங்கியது.
கேரளாவை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து மசூதிகளிலும் இன்று அதிகாலை தொழுகையுடன் முஸ்லிம்கள் நோன்பு துவங்கினார்கள்.தினமும் அதிகாலை முதல் மாலை வரை 30 நாட்கள் முஸ்லீம்கள் உண்ணாமல் நோன்பிருந்து இறுதியில் ரமலான் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுவார்கள்.