ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தேர்தல் நேரத்தை மாற்றியமைக்குமாறு இஸ்லாமியர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரம்ஜானோடு சேர்த்து கோடை வெயிலையும் மனதில் வைத்து தேர்தல் நேரத்தை மாற்றக் கோரி தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கோரப்பட்டது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்துக்கு பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம் தேர்தல் அனைத்துச் சார்புள்ள மதத்தினருக்காக செயல்படக்கூடிய ஒரு அமைப்பு. அப்படி இருக்கையில் தனிப்பட்ட ஒரு குறிப்பிட்ட மதத்திற்காக தேர்தல் நேரத்தை மாற்றுவது சாத்தியம் இல்லாதது என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் இம்மனுவை தள்ளுபடி செய்துள்ளது.