தனுஷ் நடிப்பில் நீண்ட காலமாக திரைக்கு வராமல் இருந்த எனை நோக்கி பாயும் தோட்ட திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.தனுஷ் முதன் முறையாக கெளதம் வாசுதேவ் மேனனுடன் கூட்டணி அமைத்த படம் ‘எனை நோக்கு பாயும் தோட்டா’. தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.
இயக்குநர் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படம் நீண்ட காலமாக வெளியாகாமல் இருந்து வருகிறது.கடந்த இரண்டு வருடங்களாக படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் ரிலீசாகாமல் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது படம் செப்டம்பர் மாதம் 6-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுஇந்நிலையில் படத்தின் ட்ரெய்ல்ர் தற்போது வெளியாகியுள்ளது