Mnadu News

சேரனின் ‘ராஜாவுக்கு செக்’ படத்தின் டிரைலர் வெளியிடு

இயக்குனர் சாய் ராஜ்குமார் இயக்கத்தில், இயக்குனர் சேரன் நடித்துள்ள படம் ‘ராஜாவுக்கு செக்’. இந்த படத்தில் சரயூ மோகன், நந்தனா வர்மா, சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டீசர் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதனை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியுட்டுள்ளார்.

திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post with your friends