தற்பொழுது உள்ள காலகட்டத்தில் சிறுமிகளின் பாலியல் கொள்ளை அதிகரித்து வருகிறது .அந்த பெரும் குற்றத்தை செய்த கொலையாளிகளுக்கு தண்டனை கொடுக்கவேண்டும் என பலரது ஆதங்கமாக உள்ளது. இந்நிலையில் ,நாட்டையே உலுக்கிய கத்துவா சிறுமி கொலை வழக்கு தற்போது விசாரணைக்கு வந்துள்ளது .
கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரியில் காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .இந்நிலையில் , கத்வா சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் இதுவரை 6 பேர் குற்றவாளிகள் என பதான்கோட் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது .
இந்நிலையில், பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட 6 பேருக்கான தண்டனை விவரம் பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது .