காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனையாக இயங்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய கட்டடங்களும், வசதிகளும் ஏற்படுத்தப்பட்டாலும், அதை பராமரிக்கும் துப்புரவுப் பணியாளர்கள் முறையாக மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்தாததால் அங்கு சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.அரசு மருத்துவமனையில் தினமும் சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகள், மருத்துவமனையின் பிணவறை அருகேயும், சுற்றியுள்ள பகுதியிலும் கொட்டப்படுகிறது.இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இது மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளை மட்டுமன்றி அலுவலர்களையும் பாதிக்கிறது. மேலும், அரசு மருத்துவமனை பிணவறையின் பின்புறமுள்ள குடியிருப்புவாசிகளும் அவ்வப்போது ஏற்படும் கடும் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். எனவே, மருத்துவமனையில் இருந்து தினசரி வரும் மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பாக மூடப்பட்ட தொட்டியில் சேகரித்து அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More