நாளை முதல் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து புதிய தொழில்நுட்பங்களை அறிந்து தமிழ்நாட்டில் செயல்படுத்திடவும், வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும் பிற முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீட்டைப் பெறவும், இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார்.
இதையொட்டி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதே போன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோரும் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.