Mnadu News

சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு குறித்த தகவல்

இயக்குனர் விஜய் ஆனந்த் இயக்கத்தில், நடிகர் சந்தானம் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தற்போது முன்னனியில் இருக்கும் நகைச்சுவை நடிகர் யோகிபாபு இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்திற்கு ‘டகால்டி’ என தலைப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே நடிகர் சந்தானம் இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends