ஊழலற்ற நிலையான ஆட்சி அமைய அதிமுக விற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அதிமுக அமைத்துள்ள மெகா கூட்டணியை அக் கட்சிக்கு கிடைத்த முதல் வெற்றி என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் நெல்லையில் பிரச்சாரம் மேற்கொண்டார் .
தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை நிறைவடைதை தொடர்ந்து நெல்லை மக்களவை தொகுதியின் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இன்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனை ஆதரித்து பாளையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அவருக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கபட்டது. பின்னர் அவர் பேசியதாவது,மத்தியில் நிலையான ஊழலற்ற நேர்மையான ஆட்சி அமைவதற்காவே இந்த கூட்டணி அமைக்கபட்டுள்ளது.
ஆனால் காங்கிரஸ் கட்சியுடன் பத்தாண்டு ஆட்சி மற்றும் பாஜகவுடன் ஐந்தாண்டு ஆட்சியில் பங்கெடுத்த திமுக இக்கூட்டணியை சந்தர்பவாத கூட்டணி என்று கூறுகிறது.காங்கிரஸ் ஊழல் செய்த கட்சி திமுக அதற்கு உறுதுணையாக இருந்த கட்சி அதிமுக அமைத்துள்ள மெகா கூட்டணியை அக்கட்சிக்கு கிடைத்த முதல் வெற்றி.
மத்தியில் ஊழலற்ற நிலையான ஆட்சி அமைய அதிமுக விற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் என்று அவர் பேசினார் .அப்போது அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன், அதிமுக, சமக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.