Mnadu News

நாயகனாக களமிறங்கும் ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்

சென்னையில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வரும் சரவணா ஸ்டோர்ஸ். தி.நகர், பாடி, குரோம்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்காக பிரம்மாண்டமான விளம்பரங்கள் தொலைகாட்சியில் அனுதினமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. முன்னதாக இந்த விளம்பரங்களில், முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வந்தனர்.

ஆனால், சமீபகாலமாக இந்த நிறுவனத்தின் விளம்பரங்களில் ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணனே நடிக்கத் துவங்கியுள்ளார். இந்நிலையில், தற்போது இவர் நாயகனாக நடிக்க முடிவு செய்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது . இதற்காக கதை கேட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். வரும் 2020ம் ஆண்டு திரைப்படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

Share this post with your friends