சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன் அதிபர் ராஜகோபாலின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் முன்னதாக நிராகரிக்கப்பட்டது .சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று ஜாமீனில் உள்ள சரவணபவன் அதிபர் ராஜகோபால் சரணடைய கெடு நேற்று முன்தினத்துடன் முடிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.
சரணடைய வேண்டிய நிலையில் உச்சநீதிமன்றத்தில் ராஜகோபால் புதிய மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.உடல்நிலையை காரணம் காட்டி தண்டனை காலம் முழுவதையும் மருத்துவமனையிலேயே கழிக்க கோரிக்கை விடுத்திருந்தார்.இந்நிலையில் ,சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் உடனே சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராஜகோபால் சரணடைவதற்காக ஆம்புலன்ஸில் சென்னை குற்றவியல் நீதிமன்றத்துக்கு வந்தடைந்தனனர்.ராஜகோபாலை சக்கர நாற்காலியில் நீதிமன்ற அறைக்கு அழைத்து வர நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார் .