ஜுன் 3ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவது ஜூன் 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வரும் நிலையில், பள்ளிக் கல்வித்துறை இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், 2019மற்றும் 20 ஆம் கல்வியாண்டில், மாணவர்களுக்கான பாடத் திட்டங்கள் முழுமையான அளவில் முடிக்கப்பட உள்ளதால், ஜூன் 3 ஆம் தேதியன்று, அனைத்து பள்ளிகளும் திறக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More