Mnadu News

அரசு பேருந்து ஓட்டுநரின் அலட்சியத்தால் பேருந்தில் இருந்து கீழே விழுந்த பள்ளி மாணவர்கள்..!

திருநெல்வேலி, டவுனில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில், சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மாணவர்கள் படித்து வருகின்றனர். தமிழக அரசின் இலவச பேருந்து பயண அட்டையை பயன்படுத்தி பள்ளிக்கு வந்து செல்லும் மாணவர்கள், தினமும் பள்ளி முடிந்து பேருந்தில் ஏறும் போதே, ஓட்டுநர் பேருந்தை இயக்குவதாகவும் இதனால், மாணவர்கள் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைவதாகவும் குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகின்றனஇந்நிலையில், நேற்று மாலை வழக்கம் போல், பள்ளி முடிந்து, வீடு திரும்புவதற்காக மாணவர்கள் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது வந்த அரசுப் பேருந்து, நிறுத்தத்தில் நிற்காமல் சற்று தள்ளி நின்றது. இதனால், மாணவர்கள் ஓடிச் சென்று, முந்தியடித்தபடி பேருந்தில் ஏறினர். அப்போது, பேருந்தின் ஓட்டுநர், திடீரென பேருந்தை வேகமாக இயக்கியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத மாணவர்கள், பேருந்தின் சக்கரத்தின் அருகே விழுந்தனர். அதிர்ஷ்டவசமாக  மாணவர்கள், அரசு பேருந்து சக்கரத்தின் பின்புறமாக விழுந்ததால் உயிர் தப்பினர்.இது தொடர்பான சிசிடிவி காட்சிகள், தற்போது வெளியாகியுள்ளன. இதனை பார்த்த பொதுமக்களும், பெற்றோர்களும் கடும் வேதனை அடைந்தனர்.

Share this post with your friends