ஃபோனி புயலால் ஏப்ரல் 30-ம் தேதி மற்றும் மே 1-ம் தேதிகளில் வடதமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நாளை காலை வட தமிழகத்தில் 40கி.மீ வரைக்கும் மாலையில் 70 கி.மீ வரைக்கும் காற்று வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நாளையும் நாளை மறுநாளும் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.ஃபானி புயல் வடமேற்கு திசையில் நகரும் என்றும், ஏப்ரல் 30, மே 1 ஆகிய நாட்களில் வடதமிழகம்-தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் 300 கிலோ மீட்டர் தொலைவு வரை வரக்கூடும் என்றும், பின்னர் திசைமாறி, வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகரக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More